பாவம் நளினி, நொறுங்கிய இதழியல் நெறிகள்

ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் எந்த அறத்தைப் பின்பற்றினார்கள் என்பது குறித்த விவாதங்களுக்கு முடிவேயில்லை.
அறங்களை மீறுவதென்பது மே 21ந் தேதியுடன் முடிந்துவிடவில்லை. குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்ட 26 பேருக்கும் தூக்குதண்டனை விதித்த நீதிபதி தனக்குத் தோன்றியபோதெல்லாம் சிரச்சேதம் என உத்திரவிட்ட Alice In Wonderland ராணியை நினைவுபடுத்தினார்.
நளினியின் தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க பரிந்துரை செய்த சோனியா காந்தி, நளினியை சிறையில் சந்தித்த பிரியங்கா – இவ்விருவரே இந்த சோகக் காதையில் ஓரளவு மனிதாபிமானமுடைய நபர்களாகத் தோன்றுகின்றனர்.
சமூகத்திற்கு வழிகாட்டுவதாக சொல்லிக்கொள்ளும் ஊடகங்கள் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான செய்திகளை வெளியிடும்போது இதழியல் நெறிகளை தொடர்ந்து  புறக்கணித்து வந்திருக்கின்றன.  நளினியின் விடுதலை கோரிக்கை குறித்து அரசின் முடிவு வெளியிடப்பட்டபோதும் இதுதான் நடந்தது.
மவுண்ட்ரோட் மஹாவிஷ்ணு தனது செய்தியுடன் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்ட புகைப்படத்தை வெளியிட்டது. கொலையில் நளினிக்கும் பங்கிருந்திருக்கிறது என்பதை அவ்வாறு சுட்டிக்காட்டி, ஒன்றுமே தெரியாத அப்பாவியாக உட்கார்ந்திருக்கிறாரே கல்நெஞ்சுக்காரர், இவருக்கா கருணை என்று கேட்பதுபோல் அமைந்திருந்தது அப்புகைப்படம். டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேடோ நளினி கொலைகாரியாக மாறிய வரலாற்றை எடுத்துக்கூறியது.
விடுதலை கோரிக்கை ஏன் மறுக்கப்படுகிறது என்பதற்கு சிறை ஆலோசனைக்குழு கூறும் 8 அபத்தமான காரணங்களை, தமிழ் நாளேடுகள் எவ்விதக் கேள்விகளுக்கும் உட்படுத்தாமல், அப்படியே வெளியிட்டு, அரசுக்கு தங்கள் விசுவாசத்தையும், முதுகெலும்பற்ற தன்மையினையும் பறைசாற்றின.
ராயப்பேட்டையில் வாழ்வோரெல்லாம் முக்கிய புள்ளிகளுக்கும், அமெரிக்க தூதரகத்திற்குமே ஆபத்து விளைவிக்கக்கூடியவர்கள் என்ற ரீதியில் காவல்துறை ஆய்வாளர் அறிக்கை சமர்ப்பிக்க, ஆமாம் ஆமாம், அங்கு இப்போது வசிக்கும் தன் குடும்பத்தினருடன் போய் நளினி வாழத்தொடங்கினால் என்ன ஆவது என்று கவலைப்பட்டிருக்கிறது ஆலோசனைக்குழு. (டைம்ஸ் ஆஃப் இண்டியா பரிந்துரையின் பலவீனங்களை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறது என்பதையும் இங்கே சுட்டிக்காட்டவேண்டும்.)
நளினிக்கு விரோதமாகவே செய்திகள் அமைந்திருந்ததாக அவருக்காக வாதாடிய வழக்கிறிஞர்கள் வருத்தப்படலாம். ஆனால் நமது ஊடகங்கள் தங்களுக்கு வசதியாக இருக்கும்போதுதான், தங்களுக்கு கேடு எதுவும் விளையாது என்று நினைக்கும்போதுதான் மனித உரிமை, மனித நேயம் போன்றவை குறித்து அக்கறை காட்டி வந்திருக்கின்றன என்பதை மறக்கக்கூடாது.
அதெல்லாம் போகட்டும், இன உணர்வு வேண்டாமா என்று தமிழ் பற்றாளர்கள் வருந்தலாம். ஆனால் இப்படி ஒரு நிலை ஏன் வந்தது? மற்றவர்களின் உரிமை மறுக்கப்பட்டபோது இதே தமிழ் பற்றாளர்கள் எடுத்த நிலைப்பாடு என்ன என்பது பற்றியும் அவர்கள் சிந்திக்கலாம்.
Advertisements

தொடரும் போராட்டம்

இந்துவில் போராட்டம் தொடர்கிறது. ஸ்டாலினிஸ்டுகள் என்னை ஒடுக்க முயற்சிக்கின்றனர், ஆனால் நடக்காது என்கிறார் மாலினி. அவர் ஒரு கம்யூனிஸ்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பல நேரங்களில் கம்யூனிஸ்டுகளைவிட, மார்க்சீயத்தைக் கரைத்துக்குடித்தவர்களைவிட, முன்னேற்றக் கருத்துக்களையுடைய தாராள மனதுடையவர்கள் (progressive liberals) ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

திபேத்திலோ செக்கோஸ்லோவாக்கியாவிலோ இன்னும் பல இடங்களிலும் மனித உரிமைகள் மீறப்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல்கொடுப்பது இவர்கள்தான். சரியாகச் சொல்லவேண்டுமானால் மார்க்சீயத்தின் பெயரால், இறுகிப்போன, வறட்டுத்தனமான,  குறுங்குழு அணுகுமுறையினை, அத்தகையவர்களின் சர்வாதிகாரத்தை உயர்த்திப்பிடிக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு இந்த லிபரல்களே மாற்று மருந்து.

ராமின் மதச்சார்பின்மைக்கு மாலினியின் மதச்சார்பின்மை எவ்விதத்திலும் குறைந்ததல்ல. இன்னும் சொல்லப்போனால் அதிகாரத்தில் இருப்போரைத் தட்டிக்கேட்கும் துணிவு அவருக்கே அதிகம்.

அவருடைய தனிப்பட்ட குணாதிசயங்கள் பற்றி, அவருடைய அல்லது அவரை ஆதரிக்கும் ரவி, முரளி போன்றோரின் பொதுவான அரசியல் பார்வைகள் பற்றி விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தற்போதைய ஆணவ நிர்வாகத்திற்கெதிரான அவர்கள் போராட்டத்திற்கு நீதியைப் பற்றிக் கவலைப்படுவோர் ஒவ்வொருவரும் ஆதரவு தெரிவிக்கவேண்டும்.

என்னுடைய புகழுக்கு களங்கமா? விடமாட்டேன். Defamation வழக்கு தொடுப்பேன் என்கிறார் ராம். அ தேவாதத்தைத்தானே வழக்கு போடும் ஒவ்வொருவரும் முன்வைக்கிறார்கள். அவர்களுக்கொரு ஒரு நியாயம், உங்களுக்கொன்றா? ஆனால் இதுதானே ஸ்டாலினியம், மக்கள் பெயரால் , புரட்சியின் பெயயரால் எந்த அக்கிரமத்தையும் செய்வது, தட்டிக்கேட்டால் மக்கள் விரோதி என்பது.

மாலினிக்கும் மற்றவர்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள். அவர்களுடைய முயற்சிகளின் விளைவாக, சில அற்பத்தனங்கள், சில கயமைத்தனங்கள், சிலரது பதவி வெறி,  பதவியைத் தக்கவைத்துக்கொள்ள  மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி இவையெல்லாம் அம்பலமாவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

Comrade Wins, But Journalism Loses

Gone are the days when our comrade was sulking. And was seeking the help of all and sundry to help him get his share of the pie. Ultimately he had to settle for Frontline and Sportstar alone.

But he has since stormed back with a vengeance and would not let go of the throne. Attaining 65, why shouldn’t he gracefully step down?  So power hungry, perhaps he is scared he would go mad without that power.

Insiders say that there were very few backers for his putative rival. Well, she is quirky, unpredictable and explosive. But that is not why she is being held at bay.

Rather she has it in her to take on the powers that be – which in turn could mean denial of ads and hence lower revenue.

Apparently her own sisters lined up against her. Money is thicker than blood after all.

Thus comrade has not consolidated his position by the blinding brilliance of his unquestionable talents – rather he has ingratiated his way into the favour of all those who matter,  inside and outside his firm. The Board wants to persist with him only because he would continue to rake in the moolah.  What a fall?

Even more disgraceful he should threaten to sue the papers which had put out some obviously ill-informed news.

As one of his brothers moaned – When The Hindu has taken a strong stand against criminal defamation, to use it as a threat to silence journalists does seem strange.

And the worsted rival – As journalists, why should we be afraid of public scrutiny?

But then who cares? Am disappointed though, as I was hoping against hope the paper could become that much livelier.

Comrade Ram

The Hindu is arguably the most credible Indian daily. Such is the fetish the management makes of authenticity, those reporting on some death might be pardoned if they seek to confirm from the dead themselves they have indeed breathed their last. Erring on the side of caution, fine, it has its virtues, problems like confirming deaths notwithstanding!

Let’s not go into it much here. The Hindu has earned its credibility over a long period. Hats off.

And Mr. N. Ram is, again arguably, the most progressive intellectual among Indian editors.

Whereas I consider Times of India an evil, in every sense of the term. Exemplifying the hegemony concept of Gramsci. Professing to cater to the middle class tastes, pandering to jingoism and the most disgusting of middle class prejudices, not to mention that its staff at every level are treated like dirt.

But such is the western liberal ethos that it can rise to the occasion when it so chooses. Like Times did during the abominable pogrom in Gujarat in 2002. It was the conservative Telegraph that broke the story of the massacre of Tamil civilians in the last days of the war with LTTE. Any number of such instances can be cited in favour of the bourgeoise press.

Times of India indeed comes out with flying colours in the Basu coverage, leaving the venerable The Hindu, edited by a self-proclaimed comrade, far behind.

Certainly Jyoti Basu was a great leader, a simple, humble man, he implemented far-reaching land reforms and kept the communal elements at bay.

That’s all fine. But what about the poverty, malnutrition and illiteracy, why the Lalgarh war, why the Maoists, and how come tub-thumping Mamata and the discredited Congress seem poised to romp home in the next elections, why are people disenchanted, what went wrong, where, when?  Questions, questions, a whole lot of them.  But not a word in the Hindu.

Basu played a key role in putting down the original Naxal rising.  How heart-wrenching it was for him then? Or it wasn’t?

More than anything else he is associated with that ‘historic blunder.’ Was it or not? Except for a passing mention, it’s not analyzed at all in The Hindu.

The issue reporting Basu’s death reads more like People’s Democracy and not a so-called independent newspaper. On the other hand look up the TOI. They too are awash with stories on Basu, but some of them really insightful and relatively balanced, and not hallelujahs.

M.J.Akbar’s is quite good. Why did you come to see a dead man is a touching quote – never mind it almost sounds made up, or even a clichéd ending. Sometimes clichés can touch you after all.

Don’t speak ill of the dead doesn’t apply to political commentaries, even if it’s on the day of reporting the death. The Times has indeed done a commendable job, no shrill anti-Communist offensive there. Can’t Ram, with his army of reporters and contacts, manage something half decent?

Whether it is West Bengal or Kerala, one can find Hindu reporters huffing and puffing, almost despairing, how to report what is happening on the ground without offending the boss. The same goes for foreign correspondents. After all comrades are nothing if not internationalists.

Forget Ram’s nostril-flaring opposition to Dalai Lama. How is the Hindu coverage  of Han-Muslim tensions or the repeated adulteration scandal or the misery of the rural folk in the great country?

Such is his loyalty to the erstwhile Mecca that his correspondent in Moscow now rarely reports anything unflattering to Putin. Even during the horrendous bombing of Grozny, we didn’t get to read anything on what was happening there.

Look at Frontline you wont get a word against that monster of a ruler Robert Mugabe, for he is supposed to be anti-West.

In the case of Lanka, Ram’s stance has been widely panned. If they extended unstinted support for President Mahinda Rajapakse and campaigned against any cease-fire, it all could perhaps be attributed to their understandable distrust  of the LTTE, but how would one justify Ram’s clean chit to the detention camps after the war? How could they be silent on the terrible misery faced by the civilians? Even messages condoling the death of Prabhakaran’s father are scrupulously ignored.  The list is endless.

It is indeed a tragedy The Times of India, with all its despicable values, should be the largest selling newspaper in the country.  But perhaps a greater tragedy is a ‘committed’ commie like Ram should come to head a newspaper like The Hindu.

Good literature or reportage was never produced in the Stalinist era, barring very few exceptions. Whatever was, was a dissident outpouring. Even after the disgraceful fall, few comrades ever learnt anything or drew the right lessons.

Certainly not comrade Ram.