குஷ்பு அரசியலில் – யாருக்கு என்ன பயன்?

நடிகை குஷ்பு, திருமணத்திற்கு முன் உடலுறவு பற்றி ஏதோ சற்று துணிச்சலாகப் பேசி விட்டார். நமது ஊடகங்கள் அதைப் பெரிது படுத்த, அது சுப்ரீம் கோர்ட் வரை செல்ல, நீதிபதிகளும் நடிகைக்கு சார்பாகத் தீர்ப்பளிக்க, அவருக்கு நாடளவில் அங்கீகாரம் கிடைத்து விட்டது (A star attained a different kind of stardom). பெண்ணியத்திற்காகக் கொடி பிடித்து அந்தக் கொடியை எவரெஸ்ட் சிகரத்தில் கொண்டு நட்டவர் என்கிறார்கள்!. அவரும் தி மு கவில் திடீரென்று சரணடைந்து விட்டாரா, வேறு சிலரைப் போலவே !. உடனுக்குடன் ஜயா டிவியில் நடத்திக் கொண்டிருந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார் — எதிர்பார்த்தது போலத்தான். தி மு கவில் பெண் இனத்திற்கு என்ன மரியாதை இருக்கும்? இவர் நிலை என்னவாகும்? பெருந்தலைவரோ பல பெண்டாட்டிக்காரர். இது தனிப்பட்ட விஷயம்தான் என்றாலும் அவர் பெண்களைப் பற்றி பெரிய முற்போக்கான எண்ணம் உடையவர் என்று யாரும் நம்பத் தயாராக இல்லை. அவர் எழுதித் தள்ளிய நீண்ட நாவல்களில் பெண்களை நுகரத்தக்க அழகு பொம்மைகளாகத் தான் சித்தரித்திருக்கிறார். போதாக் குறைக்கு இவற்றிற்கு ஓவியம் வரைந்தவரின் கைவண்ணம் வேறு. கட்சியில் கனிமொழி, தற்பொழுது பூங்கோதை ஆலடி அருணா, இவர்கள் தவிர எத்துணைப் பெண்கள் பொறுப்பில் உள்ளார்கள் என்று கணக்கெடுக்க வேண்டும். அப்படி குஷ்புவிற்கு பெரிய “பதவி” ஒன்றைத் தூக்கிக் கொடுத்தாலும், உடன் பிறப்புகள் சும்மா இருக்குமா? குஷ்பு மேடையில் முழங்கினால், அவர் பேசியதைத் தெளிவு படுத்த ஒரு உரையாசிரியர் வேறு தேவைப்படுவாரே! இப்படியெல்லாம் கட்சி தழைக்க வேண்டுமா? தமில் மக்கலுக்கு இதெல்லாம் தேவைதானா? அன்றொரு நாள், நடிகை ஜயப்ரதா சமஜ்வாதி கட்சியில் சேரக் காரணம் பெரிய கொள்கையின் உந்துதல் அல்ல. அவர் அரசு வழங்கிய மான்யத்தை சரிவர உபயோகிக்க வில்லை, அதற்கான கணக்கும் அவரிடம் இல்லை. ஜயப்ரதாவைக் காப்பாற்ற தலைவர் அமர்சிங் வாக்களித்திருந்ததால் அவர் கட்சியைத் தழுவ நேர்ந்தது. குஷ்புவிற்கு இது போன்ற நிர்ப்பந்த நிலை இருக்கக் கூடுமா? இல்லை பெருந்தலைவரிடம் ஒரு பேரரசர் போலப் பணமும் சொத்தும் கொழுத்து இருப்பதால் பல துறைகளில் உள்ளவர்களை வாங்கியது போல, குஷ்புவையும் விலைக்கு வாங்கி விட்டாரா? யுக்தியற்றவரா நமது கலைஞர்! இங்கே நடிகர் எஸ் வி சேகர் நமது நினைவிற்கு வரலாம்! குஷ்பு இனி படங்களில் நடிப்பாரா? நெப்போலியன் நடிப்பதில்லை. எம் ஜி ஆர் தொடர்ந்து நடிப்பதற்கும் அவருக்குக் கொடுக்கக்கூடிய அமைச்சர் இலாக்காவிற்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி, எம் ஜி ஆர் தொடர்ந்து நடிப்பதற்கே குறுக்கே நின்றவர்தான் நமது கலைஞர். குஷ்பு விளம்பரங்கள் இனி வருமா? பெறும் தொகையில் கட்சிக்கு எவ்வளவு ஒதுக்க நேரிடும்? வானில் உயர சுதந்திரமாகப் பறந்து கொண்டிருந்த ஒரு பறவை ஏன் தானே ஒரு கூட்டிற்குள் தன்னை அடைத்துக் கொள்ள முற்படுகிறது? இந்தப் பறவையின் உலக அனுபவம் இவ்வளவுதானா? இது ஒரு அப்பாவிப் பறவைதானா? வேறு பின்னணிகள் உள்ளனவா? அறிந்தால் சொல்லுங்க

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: