பாவம் நளினி, நொறுங்கிய இதழியல் நெறிகள்

ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் எந்த அறத்தைப் பின்பற்றினார்கள் என்பது குறித்த விவாதங்களுக்கு முடிவேயில்லை.
அறங்களை மீறுவதென்பது மே 21ந் தேதியுடன் முடிந்துவிடவில்லை. குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்ட 26 பேருக்கும் தூக்குதண்டனை விதித்த நீதிபதி தனக்குத் தோன்றியபோதெல்லாம் சிரச்சேதம் என உத்திரவிட்ட Alice In Wonderland ராணியை நினைவுபடுத்தினார்.
நளினியின் தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க பரிந்துரை செய்த சோனியா காந்தி, நளினியை சிறையில் சந்தித்த பிரியங்கா – இவ்விருவரே இந்த சோகக் காதையில் ஓரளவு மனிதாபிமானமுடைய நபர்களாகத் தோன்றுகின்றனர்.
சமூகத்திற்கு வழிகாட்டுவதாக சொல்லிக்கொள்ளும் ஊடகங்கள் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான செய்திகளை வெளியிடும்போது இதழியல் நெறிகளை தொடர்ந்து  புறக்கணித்து வந்திருக்கின்றன.  நளினியின் விடுதலை கோரிக்கை குறித்து அரசின் முடிவு வெளியிடப்பட்டபோதும் இதுதான் நடந்தது.
மவுண்ட்ரோட் மஹாவிஷ்ணு தனது செய்தியுடன் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்ட புகைப்படத்தை வெளியிட்டது. கொலையில் நளினிக்கும் பங்கிருந்திருக்கிறது என்பதை அவ்வாறு சுட்டிக்காட்டி, ஒன்றுமே தெரியாத அப்பாவியாக உட்கார்ந்திருக்கிறாரே கல்நெஞ்சுக்காரர், இவருக்கா கருணை என்று கேட்பதுபோல் அமைந்திருந்தது அப்புகைப்படம். டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேடோ நளினி கொலைகாரியாக மாறிய வரலாற்றை எடுத்துக்கூறியது.
விடுதலை கோரிக்கை ஏன் மறுக்கப்படுகிறது என்பதற்கு சிறை ஆலோசனைக்குழு கூறும் 8 அபத்தமான காரணங்களை, தமிழ் நாளேடுகள் எவ்விதக் கேள்விகளுக்கும் உட்படுத்தாமல், அப்படியே வெளியிட்டு, அரசுக்கு தங்கள் விசுவாசத்தையும், முதுகெலும்பற்ற தன்மையினையும் பறைசாற்றின.
ராயப்பேட்டையில் வாழ்வோரெல்லாம் முக்கிய புள்ளிகளுக்கும், அமெரிக்க தூதரகத்திற்குமே ஆபத்து விளைவிக்கக்கூடியவர்கள் என்ற ரீதியில் காவல்துறை ஆய்வாளர் அறிக்கை சமர்ப்பிக்க, ஆமாம் ஆமாம், அங்கு இப்போது வசிக்கும் தன் குடும்பத்தினருடன் போய் நளினி வாழத்தொடங்கினால் என்ன ஆவது என்று கவலைப்பட்டிருக்கிறது ஆலோசனைக்குழு. (டைம்ஸ் ஆஃப் இண்டியா பரிந்துரையின் பலவீனங்களை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறது என்பதையும் இங்கே சுட்டிக்காட்டவேண்டும்.)
நளினிக்கு விரோதமாகவே செய்திகள் அமைந்திருந்ததாக அவருக்காக வாதாடிய வழக்கிறிஞர்கள் வருத்தப்படலாம். ஆனால் நமது ஊடகங்கள் தங்களுக்கு வசதியாக இருக்கும்போதுதான், தங்களுக்கு கேடு எதுவும் விளையாது என்று நினைக்கும்போதுதான் மனித உரிமை, மனித நேயம் போன்றவை குறித்து அக்கறை காட்டி வந்திருக்கின்றன என்பதை மறக்கக்கூடாது.
அதெல்லாம் போகட்டும், இன உணர்வு வேண்டாமா என்று தமிழ் பற்றாளர்கள் வருந்தலாம். ஆனால் இப்படி ஒரு நிலை ஏன் வந்தது? மற்றவர்களின் உரிமை மறுக்கப்பட்டபோது இதே தமிழ் பற்றாளர்கள் எடுத்த நிலைப்பாடு என்ன என்பது பற்றியும் அவர்கள் சிந்திக்கலாம்.
Advertisements

One Response

  1. சமீபத்திய உதாரணம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடத்தப் பட்ட மூன்று மாணவர்களின் படுகொலை. வட இந்தியாவைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் “மனிதாபிமானத்துக்கு” பேர் போன தமிழக காவல்துறையால் அடித்து கொலை செய்யப் பட்டு ஆற்றில் வீசப்பட்டபோது, அந்தத் தகவல் தாமதமாக வந்தும், தமிழ் உணர்வாளர்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பதுதான் உண்மை. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் தோன்றிய இப்பூமியில், வாடும் பயிருக்கு வாடுவதான் எனக்கென்ன பலன் என்று நினைப்பவர்கள் இருக்கையில் என்ன செய்ய ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: