மனப்பாடம் செய்ய ஓர் அறிக்கை

தன் மீதான நடவடிக்கை குறித்து, கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்துக்கு டபிள்யூ ஆர் வரதராஜன் எழுதிய கடிதமும் அதற்கு பிரகாஷ் காரத்தின் பதிலும் பதிவிறக்கம் செய்யக்கூடிய வகையில் தரப்பட்டிருக்கின்றன.

WRV letter (2)

CPIM Prakash Karat Press

பிரகாஷ் காரத்தின் பதிலானது முழுக்க முழுக்க ஸ்டாலின் பாணியில் அமைந்திருக்கிறது.  சூ என் லாயைப் பற்றி ஹென்றி கிஸ்ஸிங்கர் சொன்ன வார்த்தைகள் – எதுவும் சொல்லாமல் 20 நிமிடங்கள் அவரால் பேச முடியும்.  பிரகாஷ் காரத்தின் அறிக்கையும் அதையே நிரூபிக்கிறது. டபிள் யூ ஆர் வரதராஜன் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் காரத்தின் அறிக்கையில் பதில் இல்லை.

பாலியல்ரீதியாக ஒரு பெண்ணைத் தொந்திரவு செய்ததாகத்தான் உ.ரா, மீது குற்றச்சாட்டு என்பது மட்டும் தெளிவாகிறது. அப்படி செய்திருந்தால் அது தவறுதான், அதற்கேற்ற தண்டனை கொடுக்கப்படலாம். உ.ரா.வோ குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார், சம்பந்தப்பட்ட பெண் விசாரிக்கப்படவேயில்லை என்கிறார், புகார் கொடுத்த கட்சித்தோழர் வாசுகியே பின்னர் நீதிபதியாகவும் ஆகிறார் காஃப்கா பாணியில். இது குறித்தெல்லாம் கராத் பதில் கூறவே இல்லை.  கட்சிக்கு யாரிடமும் தங்கள் தரப்பு நியாயத்தை நிலைநிறுத்தவேண்டிய அவசியம் இருந்தது கிடையாதே.

அவர்களைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் கட்சியின் நிலைப்பாட்டை தங்கள் தொண்டர்களுக்கு விளக்கவே கராத்தின் அறிக்கை.  இதை மனப்பாடம் செய்து, கட்சித் தொண்டர்கள் மேடைக்கு மேடை ஒப்பிக்க வேண்டும், அவ்வளவுதான்.

ஆனால் இத்தகைய அறிக்கை இல்லாமலும் இதையேதான் சொல்கின்றனர் கட்சியின் உண்மை ஊழியர்கள் – பழக்கப்படுத்தினால் எவரும் எதுவும் செய்வர் என்ற உன்னத தத்துவத்தைக் கண்டறிந்த பாவ்லோவ் வழி வந்தவர்களல்லவா அவர்கள்?

கராத்தின் அறிக்கை வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுகிறது, மனிதாபிமானிகளை மேலும் கலங்கடிக்கிறது.

Advertisements

4 Responses

  1. இவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள்

    • நெகிழச்செய்யும், நம் போன்றோரின் கையறு நிலையினை நச்சென்று வெளிப்படுத்தும் மறுமொழி. ஆனாலும் நாம் விட்டுவிடக்கூடாது. தொடர்ந்து குரல்கொடுத்துக்கொண்டேயிருப்போம்.

  2. என்னதான் செய்து விட முடியும் நம்மால். அதிகபட்சம் பற்றி ஒரு பதிவோ, கட்டுரையோ எழுதலாம். காலம் பதில் சொல்லும் விரைவில்.

    • காலம் பதில் சொல்லுகிறதோ இல்லையோ, நாம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இறுதியில் சோவியத் சாம்ராஜ்யம் தகர்ந்ததற்குக் காரணம் பொருளாதார சிக்கல்களல்ல, மாறாக மக்களிடமிருந்து அன்னியப்பட்டதுதான். அப் புரிதல் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் வளருமானால், தலைமையினை கேள்வி கேட்கும் மனோபாவம் வலுப்படுமானால், கட்சிகளுக்கும் நல்லது, சமூகத்திற்கும் நல்லது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: